“இலங்கைத் தமிழரசுக் கட்சியே தமிழ் மக்களின் சொத்து என
எடுத்தியம்ப ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.”
எடுத்தியம்ப ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதேவேளை, ‘யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அந்தக் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தங்களை அணுகினால் அது தொடர்பில் வழக்குத் தொடர தாங்கள் தயாரா?’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
“நான் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளமையால் வேறு கட்சிகளுக்காக இந்த வழக்குகளில் முன்னிலையாக மாட்டேன்.” – என்று சுமந்திரன் பதில் அளித்தார்.