• Fri. Mar 14th, 2025

24×7 Live News

Apdin News

தமிழில் ரூபாயை குறிக்க ரூ பயன்படுத்தப்பட ஆரம்பித்தது எப்போது?- ஓலைச் சுவடியில் எப்படி எழுதப்பட்டுள்ளது?

Byadmin

Mar 14, 2025


ரூபாய், பொருளாதாரம், இந்தியா, தமிழ்நாடு, இந்திய ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், mkstalin

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

ரூபாயைக் குறிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘₹’ என்ற எழுத்துக்குப் பதிலாக ‘ரூ’ என்ற எழுத்தை பயன்படுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டது நாடு தழுவிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், ரூபாயைக் குறிக்க ‘ரூ’ என்ற எழுத்தை பயன்படுத்த ஆரம்பித்தது எப்போது?

தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று (மார்ச் 13) தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கையின் முன்னோட்ட காணொளியை வியாழக்கிழமையன்று வெளியிட்டார்.

இந்தக் காணொளியில் ரூபாயை குறிக்கும் குறியீடாக ‘ரூ’வை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது. இது நாடு தழுவிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.

By admin