• Fri. Oct 18th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்த்தாய் வாழ்த்து ‘திராவிடம்’ இல்லாமல் பாடப்பட்டது ஏன்? பாடலின் வரலாறும், பின்னணியும்

Byadmin

Oct 18, 2024


தமிழ்த்தாய் வாழ்த்து, ஆளுநர்

பட மூலாதாரம், Doordarshan

படக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா

சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’, என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார்.

By admin