• Fri. Oct 11th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் – பெற்றோர், ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

Byadmin

Oct 11, 2024


தமிழ்நாட்டு மாணவர்களின் மனநலன் எவ்வாறு உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

இரண்டு நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 19 வயது பெண், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று தேர்வு எழுதிய அவர், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் தான் விரும்பிய இடம் கிடைக்காததால் அவ்வாறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள்படி, இந்தியாவில் அதிக மாணவர் தற்கொலைகள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், மாணவர்களின் மனநலன் எவ்வாறு உள்ளது? அவர்களை அதிக மன அழுத்தத்திற்குள் தள்ளுவது எது? இவற்றைப் புரிந்துகொள்ள பிபிசி தமிழ் பல்வேறு கட்டங்களில் இருக்கும் சில மாணவர்களிடம் பேசியது.

By admin