• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறியது ஏன்? என்ன நடந்தது?

Byadmin

Jan 6, 2025


ஆளுநர்

பட மூலாதாரம், rajbhavan_tn

படக்குறிப்பு, ஆளுநர் மிகுந்த வேதனையுடன் அவையை விட்டு வெளியேறினார் என்கிறது ஆளுநர் மாளிகை (கோப்புப்படம்)

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, ஆளுநர் தனது உரையை வாசிக்காமலேயே வெளியேறினார்.

2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று துவங்கிய நிலையில், உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். தேசிய கீதம் பாடப்படாததால், வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் அவை தொடங்குவதாக இருந்தது.

இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு பூங்கொத்து அளித்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

By admin