• Sat. Mar 7th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டதற்கான 2 காரணங்கள் இதுவா?

Byadmin

Mar 6, 2026


ஆர்.என்.  ரவி உள்பட பல ஆளுநர்கள் மாற்றம்; பின்னணி என்ன?

பட மூலாதாரம், LokBhavanTamilNadu/Facebook

படக்குறிப்பு, ஆர்.என். ரவி

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உட்பட இந்தியா முழுவதும் பல ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் இந்திய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர் சி.வி ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது, அதற்கு அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜியின் எதிர்வினை என இந்திய அளவில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தமிழக ஆளுநரும் மாற்றம் செய்யப்பட்டது பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.

By admin