• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு ஆளுநர் ரவி குடியரசுத் துணைத்தலைவரை சந்தித்தது ஏன்? உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி என்ன பேசினர்? டாப்5 செய்திகள்

Byadmin

Apr 20, 2025


ஆர்.என். ரவி - ஜெகதீப் தன்கர்

பட மூலாதாரம், rajbhavan_tn

படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்தார்

இன்றைய (20/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சனிக்கிழமை (ஏப். 19) சந்தித்துப் பேசியதாக, இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், “ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. அத்துடன், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவையும் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது அவசரச் சட்டம் பிறப்பிப்பதா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே, கடந்த ஏப்.17-ம் தேதி மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு சட்ட நிபுணர்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

By admin