• Thu. Jan 9th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு சட்டப்பேரவை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் என்ன?

Byadmin

Jan 9, 2025


அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

பட மூலாதாரம், Tamil Nadu Legislative Assembly

படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் அவைக்கு வந்திருந்தனர். மாணவி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த அதிமுக, “கடந்த ஆட்சியில் 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பியது.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன? கைதான நபர் குறித்தும், ‘யார் அந்த சார்?’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் கூறியது என்ன? இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ், விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசியது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், தமிழக சட்டப்பேரவை, மு.க.ஸ்டாலின் விளக்கம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர்.

இதில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த விவகாரத்திற்கு, பல்கலைக் கழகத்தின் வேந்தரான ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

By admin