• Fri. Oct 18th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: சாதி, பணம், பாலியல் ரீதியாக சுரண்டப்படும் ஆய்வு மாணவர்கள் – என்ன நடக்கிறது?

Byadmin

Oct 18, 2024


கல்வி, தமிழ்நாடு, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மாணவர்கள்
படக்குறிப்பு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்என் ரவியிடம் புகார் மனுவைக் கொடுக்கும் பிரகாஷ்

‘‘காய்கறி வாங்கி வருவது, துணிமணிகளைத் துவைப்பது, குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவது என வழிகாட்டி பேராசிரியர்கள் (Guide) சொல்கிற அனைத்து வேலைகளையும் ஆய்வு மாணவர்கள் செய்துதான் ஆக வேண்டும். அதேபோல, அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும்.’’

ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள பிரகாஷ் என்ற மாணவரின் குற்றச்சாட்டு இது. இவர்தான், கடந்த அக்டோபர் 14 அன்று, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தடைகளை மீறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனுவைக் கொடுத்தவர்.

‘‘ஆய்வு மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகாரின் மீது, கண்டிப்பாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும்’’ என்று உறுதியளித்திருக்கிறார் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன்.

‘‘உயர் கல்வித்துறையில் பணம் வாங்கிக் கொண்டு, பேராசிரியர்களை நியமிக்கும் வரை, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவே முடியாது’’ என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவரும், மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் நிர்வாகியுமான வீ.அரசு.

By admin