• Fri. Dec 27th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு: நிதி மோசடி புகார் காரணமாக இலங்கைக்கு குடும்பத்துடன் அனுப்பப்பட்ட பெண் – பின்னணி என்ன?

Byadmin

Dec 26, 2024


இலங்கை தமிழ் அகதிகள்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, முகமது ஷிஹாப் மற்றும் அவரது மனைவி பாத்திமா பர்சானா மார்க்கர்

திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று (டிச. 26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் தம்பதியின் 13 வயது மகனும் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை சென்றனர்.

இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, பிபிசி தமிழிடம் பேசிய அப்பெண் தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் தனிப்பிரிவில் அதுகுறித்து முறையிட்டும் சட்டவிரோதமாக இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார், அப்பெண்ணின் வழக்கறிஞர்.

இலங்கையில் இவர்கள் மீது பல நூறு கோடி ரூபாய் நிதி மோசடிப் புகார் உள்ளதால், உரிய நடைமுறைகளின்படியே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார், முகாமின் துணை ஆட்சியர்.

திருச்சி முகாமில் உள்ள இந்த தம்பதி மீது இலங்கையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன?

By admin