• Sun. Jun 29th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு விவசாயிகள் மாம்பழ விலை வீழ்ச்சியால் தவிப்பு பின்னணியில் ஆலை அதிபர்கள்?

Byadmin

Jun 29, 2025


மாம்பழ விவசாயம், மாம்பழ விவசாயிகள், தமிழ்நாடு, மாம்பழக்கூழ் ஆலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மாம்பழ விலை வீழ்ச்சியால் தமிழக மா விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த விலை வீழ்ச்சியின் பின்னணியில் மாங்கூழ் ஆலை அதிபர்களின் கூட்டணி இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆலை அதிபர்கள் அதை மறுக்கின்றனர். இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் ரீதியான மோதலும் வலுத்து வருகிறது.

தேசிய அளவில் மா உற்பத்தியில் தமிழகம் ஆறாமிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் சுமார் 360774 ஏக்கர் பரப்பளவில் மா பயிரிடப்படுவதாகவும், 9 லட்சத்து 49 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு மாம்பழம் உற்பத்தி நடப்பதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடிதம் தெரிவிக்கிறது.

By admin