• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் இருந்தாலும் பிரச்னை வந்தது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு

Byadmin

Nov 13, 2025


'வயலிலே முளைத்த நெற்கதிர்' - டெல்டா மாவட்டங்களில் என்ன பிரச்னை? பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, விவசாயி விஜி ரவி

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

”வட்டிக்கு கடன் வாங்கி மூன்றரை ஏக்கர் குத்தகை நிலத்தில் நெல் விதைத்தேன். நான்கு மாதங்களாக குழந்தையைப் பார்ப்பதைப் போல் இரவு பகலாகப் பாதுகாத்தோம். அறுவடை நேரத்தில் மழை வந்து மொத்தப் பயிர்களையும் அழித்துவிட்டது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்தேன். அறுவடை செய்த நெல்லை விற்று இருந்தால் இரண்டரை லட்சம் கிடைத்திருக்கும். எல்லாம் போய்விட்டது.”

மழையில் மண்ணில் சாய்ந்து முளைத்த நெற்கதிர்களைக் கையில் வைத்துக் கொண்டு அழுதார் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பணந்துருத்தியைச் சேர்ந்த பெண் விவசாயி விஜி ரவி.

வயலிலேயே இவரது நெற்கதிர்கள் முளைத்ததைப் போலவே, டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் தாமதம் ஆனதால் அறுவடை செய்த நெற்கதிர்களிலும் நாற்று முளைத்துவிட்டதாக விவசாயிகள் பலரும் குமுறுகின்றனர்.

நெல் கொள்முதலில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்ட, முதல்வரும், அமைச்சர்களும் எல்லாவற்றையும் மறுத்துள்ளனர்.

அமோகமான குறுவை சாகுபடி: ஆனால் கொள்முதலில் என்ன குளறுபடி? பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்

அரசியல் மோதலாக உருவெடுத்த நெல் கொள்முதல் விவகாரம்

கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்தது.

By admin