• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது எப்போது? சட்டமியற்றி 18 ஆண்டாகியும் என்ன சிக்கல்?

Byadmin

Nov 10, 2024


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டம், தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

“எங்கள் குடும்பத்திற்கு விவசாயம் தான் பிரதான தொழில். இந்தப் படிப்பை விரும்பித் தான் தேர்வு செய்தேன். 2023 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகர் படிப்பை முடித்தேன். சான்றிதழ் வாங்கும்போது கூட நம்பிக்கை இருந்தது. இப்போது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது” என்கிறார், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதா.

ரஞ்சிதா மட்டுமல்ல, கடலூர் மாவட்டம் மேல் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரம்யாவின் கருத்தும் இதையொட்டியே இருக்கிறது.

ஒரே காரணம், தி.மு.க அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை நீடிப்பது தான்.

“சட்டரீதியான தடையை நீக்கிவிட்டு அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு போதிய முயற்சியை மேற்கொள்ளவில்லை” என்பது அர்ச்சகர் படிப்பை முடித்த மாணவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

By admin