• Sun. Apr 27th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் – என்ன கூறப்பட்டுள்ளது? இன்றைய முக்கியச் செய்திகள்

Byadmin

Apr 27, 2025


இன்றைய செய்திகள், தமிழ்நாடு, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (27/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் வருகிற 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.

“ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இங்கு தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்தியாவும் தங்கள் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தானும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து ‘சார்க்’ அமைப்பு மூலமாகவும், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகவும் விசா பெற்றுவந்து, தங்கி உள்ளவர்களின் விவரங்களை மத்திய உளவுப்பிரிவு போலீசாரின் ஆலோசனையின் பேரில் குடியுரிமை துறை அதிகாரிகள் கணக்கெடுத்து சம்மன் அனுப்பி வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.” என அந்தச் செய்தி கூறுகிறது.

By admin