• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் குளிர் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதா? நிபுணர்கள் கூறும் காரணம் என்ன?

Byadmin

Jan 23, 2026


சென்னையில் இயல்புக்கு மாறான குளிர் நிலவுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் சாலைகளில் தற்போது பகல் வேளையிலும் பலர் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. அதேபோன்று, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் புல்வெளிகளில் பனி போர்த்தியது போன்று உறைபனியை காண முடிகிறது.

ஜனவரி மாதம் முடிய இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் குளிர் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

ஜனவரி 18ம் தேதி சென்னை விமான நிலையத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ். இது கடந்த சில தினங்களில் சென்னையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை. அதே பகுதியில் ஜனவரி 20 அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 டிகிரி செல்சியஸ். இப்படி, கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலையை எடுத்துக்கொண்டால், சில மாறுபாடுகள் இருந்தாலும் சராசரியாக 19-20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டியே உள்ளது.

சென்னை கூவம் ஆறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை கூவம் ஆறு

’20 டிகிரி அல்லது அதற்கும் கீழே’

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பரவலாகவே இத்தகைய குளிரான வானிலை நிலவிவருகிறது. ஜனவரி 20ம் தேதி நிலவரப்படி, குறைந்தபட்ச வெப்பநிலை வேலூரில் 15.8, தருமபுரியில் 16.5, கோயம்புத்தூர் 18.8, திருச்சி 19, சேலத்தில் 18.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.

மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஊட்டியில் 6.8, கொடைக்கானலில் 6, குன்னூரில் 9 டிகிரி செல்சியஸாக உள்ளது.

By admin