• Mon. Oct 19th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் குள்ளநரி அரிதாவதே மயில்கள் 6 மடங்கு அதிகரிக்க காரணமா? நிபுணர்கள் விளக்கம்

Byadmin

Oct 18, 2026


குள்ளநரிகள், வங்காள நரி, இந்திய நரி, விலங்குகள்

படக்குறிப்பு, வங்காள நரி என்றும் அழைக்கப்படும் இந்திய நரி

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

‘குள்ளநரிகள்’ என்பவை நம் சமூகத்தில் பெரும்பாலும் எதிர்மறையான, சூழ்ச்சியைக் குறிக்கும் குணாதிசயங்களோடு தொடர்புப்படுத்தப்படுகின்றன.

‘நரித் தந்திரம்’, ‘குள்ளநரி போலத் திட்டமிடுகிறான்’ போன்ற வாக்கியங்களை திரைப்படங்களில் கேட்டிருப்போம். அன்றாட வாழ்க்கையில்கூட சிலமுறை நீங்கள் கேட்டிருக்க அல்லது பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய நரிகள் அல்லது குள்ளநரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக விலங்கு நல ஆர்வலர்களும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

“குள்ளநரிகள் குறைவதால் யாருக்கு என்ன பாதிப்பு என நினைக்கலாம். ஆனால், அது சூழலியல் அமைப்பில் பல விளைவுகளை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, குள்ளநரிகளின் எண்ணிக்கை குறைவதால் மயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதற்கு சில தரவுகள் உள்ளன” எனக் கூறுகிறார் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞரும், காட்டுயிர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்பவருமான வினோத் குமார்.

குள்ளநரிகள், வங்காள நரி, இந்திய நரி, விலங்குகள்

படக்குறிப்பு, ‘இந்திய நரிகளுக்கு முதன்மையான அச்சுறுத்தல்கள் மனிதர்களால் ஏற்படுவதாக’ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய நரிகள் அல்லது குள்ளநரிகள்

வங்காள நரி என்றும் அழைக்கப்படும் இந்திய நரி குறித்து மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின்படி, இது இந்திய துணைக்கண்டம் முழுவதும் காணப்படும் நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய விலங்கு. இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.

By admin