• Sat. Oct 12th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் சாம்சங் தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வருவது எப்போது? 10 கேள்விகளும் பதில்களும்

Byadmin

Oct 12, 2024


சாம்சங் இந்தியா, சிஐடியூ, தமிழ்நாடு அரசு, திமுக, போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம், 30 நாட்களைக் கடந்துவிட்டது

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் தொடர் வேலை நிறுத்தம், தொழிலாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள், முதலமைச்சரின் தலையீடு, அமைச்சர்கள் பேச்சுவார்த்தை என்று கடந்த 32 நாட்களாக சாம்சங் இந்தியா நிறுவனத்தில் நடக்கும் போராட்டம் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன.

தொழிற்சங்கம் அமைப்பதை சாம்சங் இந்தியா நிறுவனம் எதிர்ப்பது ஏன்? தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதா?

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? இந்தப் போராட்டத்தை தொழில் முதலீட்டாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? கேள்வி-பதில் வடிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1. காஞ்சிபுரத்தில் சாம்சங் ஆலை எப்போது நிறுவப்பட்டது?

சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு நொய்டா மற்றும் காஞ்சிபுரத்தில் ஆலைகள் உள்ளன. காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் 2007-ஆம் ஆண்டு சாம்சங் இந்தியா ஆலை நிறுவப்பட்டது.

By admin