• Sun. Oct 5th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் தயாரித்த இருமல் மருந்து குழந்தைகளின் உயிரைக் காவுகொள்கிறதா?

Byadmin

Oct 5, 2025


இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட இருமல் மருந்தா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்து தமிழ்நாட்டின் ஸ்ரேசன் பார்மா (Sresan Pharma) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

மருந்தில் Diethylene glycol என்ற திரவம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாய் சேர்க்கப்பட்டதாகச் சோதனையில் தெரியவந்தது என்று சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது. அது தொழிலியல் பொருள்களில் பயன்படுத்தப்படும் திரவம். அதனால் உயிர்ச்சேதம் ஏற்படக்கூடும்.

எனினும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவம் அது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

6 மாநிலங்களில் 19 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதன்மூலம் தரமற்ற மருந்துகள் கண்டறியப்படும். இதுபோன்ற சம்வங்களைத் தடுக்க பரிந்துரைகள் வழங்கப்படும் என்று அமைச்சு கூறியது.

இதேவேளை, ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் பெற்றோர் பதறிய நிலையில், மருந்து பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்க டொக்டரும் அந்த சிரப்பை குடித்துள்ளார்.

இருப்பினும், டொக்டருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காம்பியாவில் (Gambia) 2022இல் இருமல் மருந்து எடுத்துக்கொண்ட 70 பிள்ளைகள் உயிரிழந்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

தரமற்ற மருந்துப் பொருள்களை ஏற்றுமதி செய்வதாக உலக சுகாதார நிறுவனம், இந்தியாவைச் சாடியது. ஆனால், இக்குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது.

By admin