• Sun. Jun 21st, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் பாம்புக்கடி மரணங்களை தடுப்பதில் உள்ள சவால்கள் என்ன? ஒரு பார்வை

Byadmin

Jun 21, 2026


தமிழ்நாடு பாம்புக்கடி இறப்புகளைத் தடுப்பதில் சந்திக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததே அவரது மரணத்திற்கு காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பாம்பு கடித்த பிறகு மிகவும் தாமதமாக வந்ததே இளைஞருக்கு சிகிச்சைக்கான பலன் கிடைக்காமல் போனதற்குக் காரணம் என்று இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கூறுவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவைகள் துறையின் இயக்குநர் மருத்துவர் டி.கே.சித்ரா, “இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பத்திடமும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களது குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையிலான தகவல் வெளியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.

இந்தச் சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அவசர கால நடவடிக்கைகள், நஞ்சுமுறி மருந்துகளின் இருப்பு, பாம்புக்கடி சிகிச்சைக்கான தயார்நிலை ஆகியவை எந்த அளவுக்குத் திறம்பட இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் பாம்புக்கடி பாதிப்பு எவ்வளவு தீவிரமானதாக உள்ளது, அதை எதிர்கொள்ள மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்புகள் போதுமான அளவுக்குத் தயாராக உள்ளனவா என்ற கேள்விகளை எழுப்புகின்றது.

உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடி மூலம் உடலில் நஞ்சு ஏறுவதை, ஒரு ‘கவனிக்கப்படாத வெப்பமண்டல நோய்’ என்று வகைப்படுத்தியுள்ளது. அதன் கூற்றுப்படி, இது கிராமப்புற மற்றும் விவசாய சமூகங்களை அதிகளவில் பாதிக்கிறது.

By admin