• Sat. Jun 21st, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவதில் தாமதம் ஏன்? மின் மாற்றி பற்றாகுறை காரணமா?

Byadmin

Jun 21, 2025


கோவை, மின்சாரம், மின் இணைப்பு, பற்றாக்குறை, தமிழ்நாடு மின் வாரியம்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் விநியோக மின்மாற்றிகள் பற்றாக்குறையால், குறைந்த மின்னழுத்த புதிய மின் இணைப்பு சேவைகளுக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவலின்படி, மாநிலம் முழுவதும் பரவலாக பலவிதமான மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள், மின்மாற்றிகள் இல்லாத காரணத்தால் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் மின்மாற்றிகள் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

தமிழகத்தில் மின் இணைப்புகளின் எண்ணிக்கையும், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

By admin