• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் ஹஜ், உம்ரா பயண மோசடிகள் – கண்டறிவது எப்படி?

Byadmin

Mar 16, 2025


ஹஜ், உம்ரா, முஸ்லிம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். தனது மனைவி ரெஜினாவுடன் உம்ராவுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மெக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார்.

உறவினர்கள் மூலமாக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தின் முகவரான அமீதாவின் அறிமுகம் அப்துல் காதருக்கு கிடைத்துள்ளது. தனக்கும் தன் மனைவிக்கும் தலா 77 ஆயிரம் ரூபாயை அவர் பயணக் கட்டணமாகச் செலுத்தியிருந்தார்.

ஆனால், உண்மையில் நடந்தது வேறு.

“நீண்டகாலக் கனவு என்பதால் உறவினர்கள், நண்பர்களிடம் எல்லாம் கூறி உற்சாகப்பட்டோம். ஆனால், கிளம்புவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது” என்கிறார், அப்துல் காதரின் மனைவி ரெஜினா.

By admin