• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் 37% நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட்- இந்தியாவில் 3-ஆம் இடம்- மக்களுக்கு என்ன பாதிப்பு

Byadmin

Jan 6, 2025


நிலத்தடி நீர் மாசுபாடு, நைட்ரேட் அளவு, ஆரோக்கியம், சுற்றுச்சூழல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘விவசாயத்திற்காக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்துள்ளது’

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்

அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவது காரணமாக நிலத்தடி நீரில் நைட்ரேட்டின் அளவு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலத்தடி நீர் தர ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மத்திய ஜல் சக்தி அமைச்சகம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நைட்ரேட்டின் செறிவு அதிகமாக உள்ளதாக கூறியுள்ளது.

“இந்த மாநிலங்களில் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 40% அதிகமாக நைட்ரேட் உள்ளது” என்கிறது அந்த அறிக்கை.

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன? நிலத்தடி நீர் மாசுக்கான காரணங்கள் என்ன? நைட்ரேட் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?

By admin