பட மூலாதாரம், ge
இலங்கை கடற்கரைக்கு தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வரை வீசக்கூடும். இடையிடையே 55 கி,மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். ஆகவே மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (திங்கட்கிழமை 17/11/25) காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.