• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

தமிழ் சினிமாவில் நாட்டார் தெய்வங்கள் எவ்வாறு காட்டப்பட்டுள்ளன? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Jan 22, 2026


நாட்டார் தெய்வக் கதைகள், திரைப்படங்கள், கேரளா, தமிழ்நாடு

பட மூலாதாரம், Wayfarer Films

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

நள்ளிரவை நெருங்கும் சமயம், அடர்ந்த வனத்தை ஒட்டிய ஒரு கேரள கிராமத்தை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இளைஞன் ஒருவன் நடந்து செல்கிறான். இருள் சூழ்ந்த அந்தப் பாதையில், அவன் ஏந்திச் செல்லும் தீப்பந்தத்தின் ஒளியில், தூரத்தில் ஒரு அழகான பெண் நிற்பது போல தெரிகிறது.

அந்த இளைஞனிடம், ‘கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வரும் வழியில் பாதை மாறி இங்கு வந்துவிட்டேன். என்னுடன் வீடு வரை வர முடியுமா? தனியாக செல்ல அச்சமாக உள்ளது’ என கேட்கிறாள் அந்தப் பெண்.

சரி என அந்த இளைஞனும் உடன் செல்ல, போகும் வழியில் அவள் வெற்றிலை மடித்து அந்த இளைஞனுக்கு தருகிறாள். அதை வாங்கி வாயில் போட்டு மென்றவாறு, அந்தப் பெண்ணுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே செல்கிறான்.

திடீரென, பின்னிருந்து ஒருவித உறுமல் சத்தம் கேட்க, அவன் திரும்பிப் பார்க்கிறான்.

அந்த அழகான பெண், இப்போது கோர வடிவத்துடன் ரத்தம் குடிக்கும் ‘யக்ஷி’ அல்லது ‘நீலி’-யாக காட்சியளிக்கிறாள். கூர்மையான பற்களும், தலைவிரி கோலமுமாக, அவள் நெருங்க, இளைஞன் மயங்கிச் சரிகிறான். அடுத்த நாள், அந்த இளைஞனின் உயிரற்ற உடல் கிராமத்தின் எல்லையில் கண்டெடுக்கப்படுகிறது.

By admin