• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

தமிழ் சினிமா கலைஞர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்துக்கு ஆற்றிய எதிர்வினை என்ன?

Byadmin

Jan 23, 2026


சர்ச்சையான ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி - தமிழ் சினிமா கலைஞர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அவர் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள், அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள் சில நாட்களாக விவாதப் பொருளாகி இருக்கின்றன.

”பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா?” என நேர்காணல் எடுத்த ஹரூண் ரஷீத் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்” நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது. இது ஒருவேளை வகுப்புவாத விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது” என்றார்.

மேலும் சாவா படம் பற்றி பேசுகையில், “அது பிளவுபடுத்தும் படம்தான். பிளவுபடுத்தும் தன்மையை வைத்துப் பணம் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன்” என்றார்.

முழு பேட்டி பல விஷயங்களை விரிவாகச் சொல்லியிருந்தாலும், இப்படிப்பட்ட அவரின் சில கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பின. ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்கு பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்வினையாற்றினர்.

By admin