• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்ட வடிவுக்கரசியின் ‘க்ரானி ‘ படத்தின் முன்னோட்டம்

Byadmin

Jan 27, 2026


எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘க்ரானி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரை உலகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான தயாரிப்பாளராக வலம் வரும் கலைப்புலி எஸ் தாணு- அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் விஜய குமாரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘க்ரானி: எனும் திரைப்படத்தில் வடிவுக்கரசி, திலீபன், சிங்கம் புலி, கஜ ராஜ், ஆனந்த் நாக் , அபர்ணா,  மாஸ்டர் கன்ஷ்யாம், தேவி சான்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.  மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டொக்டர் செல்லையா பாண்டியன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரி. விஜயா மேரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ஹாரர் திரைப்படங்களுக்கான வழக்கமான காட்சியுடனும், பின்னணி இசையுடனும் இடம் பிடித்திருப்பதால்… குறிப்பிட்ட ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

By admin