• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

தர்மஸ்தலா மர்ம மரணங்கள்: 1979 முதல் இன்று வரை நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு

Byadmin

Aug 5, 2025


தர்மஸ்தலா மரணங்கள்
படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமியின் சிலைக்கு அருகே அமர்ந்துள்ள அவரது தாய்.

(இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)

ஜூலை 29ம் தேதி முதல் கர்நாடகாவின் தக்‌ஷிண கன்னட மாவட்டத்தில், நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் எலும்பு கூடுகள் புதையுண்டு கிடக்கின்றவா என்று தேடும் பணி நடைபெறுகிறது. காவல்துறை மேற்பார்வையில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிலப் பகுதிகள் தோண்டப்பட்டு வருகின்றன.

அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை தான் புதைத்துள்ளதாக ஒருவர் கூறினார். அவர் தர்மஸ்தலா என்ற புனித தலத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றியதாகவும், ஒரு அதிகாரம் மிக்க குடும்பம் கூறியதன் அடிப்படையில் அதை செய்ததாக தெரிவிக்கிறார்.

1998 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் புதைக்கப்பட்ட அந்த உடல்களில் பலவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் உடையது என்று ஜூலை 3ம் தேதி செய்தியை வெளிக்கொண்டு வந்த அந்த அடையாளம் தெரியாத தலித் நபர் தெரிவித்தார்.

By admin