• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?

Byadmin

Feb 22, 2025


முடி உதிர்தல் இன்று அதிகரித்து வரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு. முடி ஆரோக்கியமாக வளர உணவில் தேவையான வைட்டமின்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வைட்டமின் D: முடி வேர்களை உறுதியாக வைத்திருக்கவும், புதிய முடி வளரச்செய்யவும் வைட்டமின் D முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் E: வைட்டமின் E ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகும். இது முடியை ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வெளிப்புற மாசு காரணமாக ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வைட்டமின் C: முடியை வலுப்படுத்த தேவையான கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் C உதவுகிறது.

இரும்புச்சத்து: உடலில் ஆக்சிஜனை குறைபாடு ஏற்படும்போது முடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சரியான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான தலைமுடியை பெறலாம்.

By admin