தலையில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து இன்று சனிக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்கரைப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என்று 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
55 முதல் 60 வயது மதிக்கத்தக்க நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தலையில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு! appeared first on Vanakkam London.