• Wed. Mar 11th, 2026

24×7 Live News

Apdin News

‘தலைவாசல்’ விஜய் நடிக்கும் ‘ஆர் ஆர் ரிசார்ட்’ இணையத்தொடரின் முன்னோட்டம் வெளியீடு

Byadmin

Mar 11, 2026


ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 13-ஆம் திகதி முதல் ‘தலைவாசல்’ விஜய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் ஆர் ரிசார்ட்’ எனும் இணைய தொடர் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் வெளியாகி டிஜிட்டல் தள பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

‘எருமை சாணி’ புகழ் விஜயகுமார் ராஜேந்திரன்-  இயக்குநர் பிரவீன் பென்னெட் இணைந்து இயக்கியுள்ள ‘ஆர் ஆர் ரிசார்ட் ‘எனும் இணைய தொடரில் ‘தலைவாசல்’ விஜய், விஜய் குமார் ராஜேந்திரன் , கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன் ,தர்ஷனா ஸ்ரீ பால், சாய் தன்யா, படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த இணையத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு அத்தியாயங்களாக வெளியாகும் என ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணைய தொடர் குறித்து குழுவினர் பேசுகையில், ” ஆர் ஆர் ரிசார்ட் எனும் கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நடைபெறுகிறது. கல்வி கற்காத ஆனால் சமையல் கலை மீது அதீத ஆர்வம் கொண்ட வெற்றி எனும் இளைஞன் – தலைமை சமையல் கலை நிபுணராக வரவேண்டும் என விரும்புகிறான். ஆனால் அங்கு கோபமும் ஒடுக்குமுறையும் கொண்ட தலைவாசல் விஜய் தலைமை சமையல் கலை நிபுணராக பணியாற்றுகிறார். இருவருக்கும் இடையேயான மோதல் தான் இந்த இணைய தொடரின் மையப்புள்ளி. ” என்றார்.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள முன்னோட்டத்தில் ஏற்கனவே வெளியான பல திரைப்படங்களின் காட்சிகள் நினைவுக்கு வந்தாலும் சமையல் கலை குறித்த நுணுக்கங்கள் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்ட இருப்பதால் டிஜிட்டல் தள பார்வையாளர்களின் கவனத்தை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

By admin