• Thu. Jun 18th, 2026

24×7 Live News

Apdin News

தவெக அரசின் முதல் பட்ஜெட் : விஜய் அரசுக்கு இருக்கும் 3 சவால்கள் என்ன?

Byadmin

Jun 18, 2026


தவெக அரசின் முதல் பட்ஜெட்: காத்திருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், CMOTamilNadu/X

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது முதல் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.

இது வெறும் நிதிநிலை அறிக்கையை மட்டுமே முன்வைப்பதாக இருக்காது எனக் கூறும் நிபுணர்கள், “மாறாக, மாற்றத்திற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இந்த அரசாங்கத்தால், தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகத் தான் விவரிக்கும் ஒரு நிதி அமைப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?” என்ற ஓர் அடிப்படைக் கேள்வி இருப்பதாகக் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த தவெக அரசின் ‘வெள்ளை அறிக்கை’ வெளியான பிறகு, இந்தச் சவால் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட அந்த அறிக்கை, ஐந்து ஆண்டுக்கால திமுக ஆட்சிக்குப் பிந்தைய மாநிலத்தின் நிதிநிலை குறித்த “கவலைக்குரிய நிலையில்” இருப்பதாக ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது.

அந்த வெள்ளை அறிக்கையின்படி, “தமிழகத்தின் நிதிச் சிக்கல்கள் தற்காலிகமானவை அல்ல, அவை கட்டமைப்பு ரீதியானவை”. எனவே, அவற்றுக்குக் கடினமான கொள்கை முடிவுகளும் நீண்டகால சீர்திருத்தங்களும் தேவைப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார்.

By admin