• Sat. May 2nd, 2026

24×7 Live News

Apdin News

‘தவெக ஆட்சி அமைக்கும்’ என்ற கணிப்பு குறித்து தமிழக அரசியலில் என்ன விவாதம்?

Byadmin

Apr 30, 2026


விஜய், தவெக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு, இந்தியா டுடே–ஆக்சிஸ் மை இந்தியா

பட மூலாதாரம், TVKPartyHQ/X

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்று தெரிவித்துள்ள நிலையில், ஒரு கருத்துக் கணிப்பு தவெக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் செய்த தவறையே, மீண்டும் அந்த நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பிலும் செய்திருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் அனைத்தும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல, கடந்த காலங்களில் முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன. நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகும்.

கணிப்புகள் கூறியது என்ன?

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், புதன்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

தமிழகத்தில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

By admin