• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

தவெக, நாம் தமிழர் போன்ற புதிய கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் எப்படி கிடைக்கும்?

Byadmin

Jan 24, 2026


விஜய்

பட மூலாதாரம், TVK

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் எப்படி சின்னங்களை ஒதுக்கீடு செய்கிறது?

தேர்தல் ஆணையம் ஆணையில் என்ன கூறியுள்ளது?

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி, அதற்கான அறிவிப்பை ஜனவரி 22ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். அதே அறிவிப்பில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் எல்லாம் விசில் சின்னமும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் டார்ச்லைட் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இருந்தபோதும், இந்தக் கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில், அந்தச் சின்னம் வேறு யாருக்காவது ஒதுக்கீடு செய்யப்படலாம் என்பதையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இந்தச் சின்னம் இப்போதைக்கு இந்தத் தேர்தலில் மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

 கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுவது எப்படி? 4 முக்கிய தகவல்

பட மூலாதாரம், Getty Images

அரசியல் கட்சிகள் பொதுவான சின்னத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் போட்டியிட பொதுவான சின்னம், ‘The Election Symbols (Reservation and Allotment) Order 1968’-ல் வரையறுக்கப்பட்ட விதிகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரமாக ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்தச் சின்னம் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது. பதிவுசெய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொதுவான சின்னத்தைப் பெற சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

By admin