• Tue. May 20th, 2025

24×7 Live News

Apdin News

‘தாடி வைத்திருந்தால் தாலி கட்டக் கூடாது’ – காரைக்கால் மீனவ கிராமங்களில் வினோத கட்டுப்பாடு ஏன்?

Byadmin

May 20, 2025


காரைக்கால் மீனவ கிராமம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நவீனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமம் தான் பூர்வீகம்.

அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை அவருக்கு நிச்சயம் செய்திருந்தனர். ஏப்ரல் முதல் வாரம் திருமணம். முகூர்த்த நேரம் நெருங்கும்போது, தாலி கட்டுவதற்கு ஊர்ப் பெரியவர்கள் அனுமதி தரவில்லை. ஒரே காரணம், மணமகனின் தாடி.

“சிறிய அளவிலான தாடியை மட்டுமே தான் வைத்திருப்பதாக அவர் கூறினார். ஆனால், அதை ஊர்ப் பெரியவர்கள் ஏற்கவில்லை. தாடியை மழித்த பிறகே அவரால் தாலி கட்ட முடிந்தது” எனக் கூறுகிறார், கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன்.

‘திருமண நாளில் மணமகன் தாடியுடன் இருக்கக் கூடாது’ என்பது இங்குள்ள 11 மீனவ கிராமங்களிலும் கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடாக உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

By admin