• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

தாத்தா – பேரன் உறவை உணர்வுபூர்வமாக விவரிக்கும் ‘ஃபிளாக்’

Byadmin

Aug 17, 2025


சர்வதேச விருதுகளை வென்ற ‘ கொட்டுக்காளி’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தீஹான் கதையை வழிநடத்தி செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஃப்ளாக் ‘ ( FLAG) எனும் திரைப்படம் – தாத்தாவிற்காக அவரது பேரன் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு பயணிப்பதை மையமாக கொண்ட உணர்வுபூர்வமான படைப்பு என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் எஸ் பி. பொன்சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃப்ளாக்’ எனும் திரைப்படத்தில் தீஹான், பொலிவுட் நடிகர் மிக்கி மக்கி ஜா, அபினவ் கோஸ்வாமி, ஆனந்த், பப்புஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எஸ் பி பொன்சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜா ரவிவர்மா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஐ & ஐ மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வை. வைரபிரகாஷ் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” தாத்தாவின் அரவணைப்பில் பேரன் – கதையின் நாயகன் வளர்கிறான். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக பேரன் எந்த விதமான திட்டமிடல் இல்லாமல் டெல்லிக்கு பயணிக்கிறார். வழி தெரியாமல் பயணிக்கும் அந்த சிறுவனின் பயணத்தில் எதிர்கொள்ளும் அனுபவம் தான் இப்படத்தின் கதை ” என்றார்.

By admin