நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த பேத்தி – கண்ணீர் வடித்த தாத்தா
தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 அளவிலான நிலநடுக்கம் தாக்கியபோது ஐந்து வயதான தெட் ஹெட்டர் சான் மழலையர் பள்ளியில் இருந்தார்.
மத்திய மியான்மரில் உள்ள கியாவுக்ஸே நகரில் மேற்கு மியை மியை கியி மழலையர் பள்ளி அமைந்துள்ளது. பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 45 கி.மீ தொலைவில் இந்த பகுதி அமைந்துள்ளது.
நிலநடுக்கத்தால் 13 பேர் இறந்ததாகப் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்புகள் மிகக் குறைவாக உள்ளன. இந்த எண்ணிக்கை குறைந்தது 40-ஆக இருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.
மியான்மர் முழுவதும் குறைந்தது 2,000 பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு எண்ணிக்கையை மறைக்கும் வரலாறு, ராணுவ ஆட்சிக்குழுவுக்கு உள்ளதால் உண்மையான இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமாகியுள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு