• Sat. Feb 28th, 2026

24×7 Live News

Apdin News

தாய் கிழவி விமர்சனம் – படத்தின் கதை என்ன? ராதிகா அறிமுக இயக்குநருடன் சேர்ந்து ஹிட் கொடுத்தாரா?

Byadmin

Feb 27, 2026


'தாய் கிழவி' விமர்சனம்

பட மூலாதாரம், Sivakarthikeyan Productions

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது தாய் கிழவி திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்த சிவக்குமார் முருகேசனுக்கு இயக்குநராக இது முதல் திரைப்படம்.

இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் இத்திரைப்படம் பற்றி என்ன சொல்கின்றன?

'தாய் கிழவி' விமர்சனம் - அறிமுக இயக்குநருடன் சேர்ந்து ஹிட் கொடுத்தாரா ராதிகா?

பட மூலாதாரம், Sivakarthikeyan Productions

படத்தின் கதை என்ன?

கருமாத்தூர் என்ற கிராமத்தில் வாழ்கிறார் பவுனுத்தாயி (ராதிகா சரத்குமார்) என்கிற மூதாட்டி.

வட்டிக்கு கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிக்க அவர் கிராம மக்களைத் துரத்துகிறார். அவரது கூர்மையான வார்த்தைகள் யாரையும் விட்டுவைப்பதில்லை. அதனால் அவர் கிராமத்தில் பெரும் வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.

By admin