• Wed. Oct 16th, 2024

24×7 Live News

Apdin News

தாழ்வான பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தயார் நிலையில் 3 ட்ரோன்கள்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு | 3 drones ready to deliver essential supplies to low-lying areas: Minister KN Nehru inspects

Byadmin

Oct 16, 2024


சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்களின் சோதனை முன்னோட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று (அக்.16) ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று (அக்.16) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்குப் பருவழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

மேலும், இந்த ட்ரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும். இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் சோதனை முன்னோட்டத்தின் அடிப்படையில் இன்று பரிசோதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, (பணிகள்), எம்.பிருதிவிராஜ், வருவாய் (ம) நிதி) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin