• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

திடீரென விக்கல் வந்தால் அதை நிறுத்துவது எப்படி?

Byadmin

Mar 16, 2025


உடலில் மார்பு மற்றும் வயிற்றை இணைக்கும் பகுதி உதரவிதானம் என அழைக்கப்படுகிறது. இது மூச்சு இயக்கத்திற்கும் உணவு செரிமானத்திற்கும் முக்கியமானதாகும். இந்த தசை திடீரென விரிந்து சுருங்கும்போது விக்கல் ஏற்படுகிறது.

விக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் ஜீரண கோளாறுகள், குறைந்த அளவு புரதச்சத்து, அதிக காரசாரம், கொழுப்பு உணவுகள், வேகமாக சாப்பிடுதல், அதிக உணவு உண்டல் போன்றவை ஆகும்.

மேலும், கல்லீரல் வீக்கம், இரைப்பை பாதிப்பு, நுரையீரல் நோய்கள், சிறுநீரக கோளாறு போன்ற மருத்துவக் கோளாறுகளாலும் விக்கல் தோன்றலாம். விக்கல் நீங்க மூச்சை தற்காலிகமாக நிறுத்துதல், வேகமாக தண்ணீர் குடித்தல், அச்சமூட்டும் உரையாடல், சீரகம் மற்றும் திப்பிலி பொடியை தேனில் சேர்த்து சாப்பிடுதல் ஆகியவை உதவும்.

தொடர்ந்து விக்கல் நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

By admin