• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

​திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 12 districts today

Byadmin

Sep 10, 2025


சென்னை: திண்​டுக்​கல், தரு​மபுரி உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் இன்று (செப். 10) கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடிசா– வடக்கு ஆந்​திரா கடலோரப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. மன்​னார் வளை​குடா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இவற்​றின் தாக்​கத்​தால் தமிழகத்​தின் பெரும்​பாலான இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் இன்று லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும்.

கோவை மாவட்​டத்​தின் மலைப் பகு​தி​கள், நீல​கிரி, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, சேலம், தரு​மபுரி, ஈரோடு, தேனி மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதே​போல, நாளை செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கடலூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழகத்​தில் சில இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று அதி​கபட்ச வெப்​பநிலை 35.6-37.4 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin