• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Byadmin

Apr 28, 2025


தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் இருக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்.

செவ்வாழைப் பழத்தின் பயன்கள்

1. உடல் எடையை கட்டுப்படுத்தும்: செவ்வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட குறைவான கலோரி அளவு கொண்டுள்ளது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

2. சிறுநீரக ஆரோக்கியம்: செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

3. சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்: செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.

4. ரத்தத்தை சுத்திகரிக்கும்: செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

5. தலைமுடிக்கு ஆரோக்கியம்: தலைமுடியில் உள்ள பொடுகு மற்றும் வறட்சி குறைய, செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்க்கலாம்.

By admin