தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் இதய நோய் வரும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இதய செயல் இழப்பு மற்றும் இதய நோயால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.
அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் இதய நோய் அபாயம் அதிகம் இருக்கும் என்றும் உடற்பயிற்சி இல்லாமல் இருக்கும் உடம்புக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 40 முதல் 60% அதிகம் என்றும் எனவே உட்காரும் நேரத்தை குறைத்து அதிக நேரம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யும் நபர்களாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 5 அல்லது 10 நிமிடம் எழுந்து ரிலாக்ஸ் செய்துவிட்டு அதன் பிறகு மீண்டும் உட்கார்ந்து வேலை செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..! appeared first on Vanakkam London.