• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

திப்பு சுல்தான் போரில் வீழ்ந்த பிறகு ஆங்கிலேயர்கள் அளித்த பரிசு மூலம் ஹைதராபாத் நிஜாம் உருவாக்கியது என்ன?

Byadmin

Jan 10, 2026


திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பிறகு கிடைத்த செல்வம் – ஹைதராபாத் நிஜாம் உருவாக்கியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத்தில் உள்ள மீராலம் ஏரியின் மீது ஒரு கேபிள் பாலம் அமைக்க தொலங்கானா மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது.

இது கட்டி முடிக்கப்பட்டால், துர்கம் செருவுக்கு அடுத்தபடியாக ஹைதராபாத்தில் மற்றுமொரு கேபிள் பாலம் பயன்பாட்டிற்கு வரும்.

இந்த மீராலம் ஏரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைசூர் போருக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.

திப்பு சுல்தானை தோற்கடித்த பிறகு கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி அந்த நேரத்தில் மீராலம் ஏரி கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மூன்றாவது நிஜாமின் திவானாக (பிரதமராக) பணியாற்றிய மீர் ஆலம் என்பவரின் பெயரில் இந்த ஏரி கட்டப்பட்டதை வரலாற்று ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

By admin