• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

திமுக அரசின் செயல்பாடுகள்தான் ஆக்கப்பூர்வ அஞ்சலி: வசந்தி தேவி நினைவேந்தல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து | Cm Stalin remarks at the Vasanthi Devi memorial meeting

Byadmin

Aug 11, 2025


சென்னை: அனை​வருக்​கு​மான கல்வி உரிமையை நிலை​நாட்​டும் திமுக அரசின் செயல்​பாடு​களே முனை​வர் வசந்தி தேவிக்கு செலுத்​தும் ஆக்​கப்​பூர்​வ​மான அஞ்​சலி என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சென்​னை, சைதாப்​பேட்​டை, தமிழ்​நாடு திறந்தநிலைப் பல்​கலைக்​கழகத்​தில் முன்​னாள் துணைவேந்​தர் மறைந்த வே.வசந்தி தேவி​யின் நினை​வேந்​தல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில் காணொலி வாயி​லாக பங்​கேற்று முதல்​வர் பேசி​ய​தாவது: கல்வி என்​பது வியா​பாரப் பொருளாகவோ, அதி​காரக் கோட்டைக்குள் பாது​காக்​கப்​படும் ஆயுத​மாவோ இல்​லாமல் எளிய மக்​களுக்​கும் கிடைக்க வேண்டும்.

கல்​வி​தான் அவர்​களுக்​கான ஆயுதம். அது​தான் அழிக்​க​முடி​யாத செல்​வம் என்​னும் நோக்​கத் ​தோடு தொடர்ந்து செய​லாற்​றி, அதற்கான இயக்​கங்​களை வசந்தி தேவி முன்​னெடுத்​தார். மாநில மகளிர் ஆணை​யப் பொறுப்​பில் இருந்​த​போது அவர் ஆற்​றிய பணி​கள் சிறப்​பானவை.

முன்​னாள் முதல்​வர் கருணாநிதி ஆட்​சி​யில் கொண்டு வரப்​பட்ட சமச்​சீர் கல்​வித் திட்​டத்தை ஆதரித்து நின்​றவர். நம் திமுக அரசின் பள்​ளிக்​கல்வி முன்​னெடுப்​பு​களை​யும் மனமார பாராட்​டிய​வர். அனை​வருக்​கு​மான கல்வி உரிமையை நிலை​நாட்​டும் திமுக அரசின் செயல்​பாடு​கள் அனைத்​தும் அவருக்கு செலுத்​தும் ஆக்​கப்​பூர்​வ​மான அஞ்​சலி என்று கூறி அவருக்கு என்​னுடைய புகழஞ்​சலியை செலுத்​துகிறேன். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

நிகழ்​வில், மார்க்​சிஸ்ட் மத்​தி​யக் குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன், மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்​தாமன், மாநில மகளிர் ஆணைய தலை​வர் ஏ.எஸ்​.குமரி, வழக்​கறிஞர் ஹென்றி திபேன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.



By admin