• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது: இபிஎஸ் | Eps says dmk govt not giving loans to farmers because it is bankrupt

Byadmin

Aug 5, 2025


திருநெல்வேலி: ‘தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யில் தற்​போது என்ன நடக்​கிறது என்​பது முதல்​வருக்கே தெரி​யாது’ என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். திருநெல்​வேலி சந்​திப்​பில் விவ​சா​யிகள், வியா​பாரி​கள் சங்க பிர​தி​நி​தி​களு​டன் பழனி​சாமி கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்​து, மனுக்​களை அளித்​தனர்.

அவற்​றுக்​குப் பதில் அளித்து பழனி​சாமி பேசி​ய​தாவது:

குடிமராமத்து பணிகள்: அதி​முக ஆட்​சி​யின்​போது குடிம​ராமத்து திட்​டத்​தின் கீழ் ஏராள​மான நீர் நிலைகளை தூர்​வாரினோம். இதற்​காக ரூ.1,240 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. மேலும் கால்​வாய்​களில் கான்​கிரீட் தளங்​கள் அமைக்​கப்​பட்​டன. ஆறுகளில் தடுப்​பணை​களை அமைத்து நிலத்​தடி நீர்​மட்​டம் உயர்​வதற்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

ஆனால், இந்த ஆட்​சி​யில் ரூ.2 ஆயிரம் கோடி​யில் தடுப்​பணை​கள் கட்​டு​வ​தாக அறி​வித்​தனர். ஆனால், ஒருசில இடங்​களில் மட்​டுமே அமைத்​து​விட்டு திட்​டத்தை கிடப்​பில் போட்டு விட்​டனர். இந்​தி​யா​விலேயே விவ​சா​யிகளின் பயிர்க்​கடன்​களை ஐந்​தாண்​டில் இரு​முறை தள்​ளு​படி செய்​தோம். வறட்சி நிவாரண​மாக விவ​சா​யிகளுக்கு ரூ.2,448 கோடி வழங்கினோம்.

விவ​சா​யிகள் அலைக்​கழிப்பு: தற்​போது, தொடக்க கூட்​டுறவு வங்​கி​களில் கடன் பெறு​வதற்கு பல்​வேறு ஆவணங்​களை கேட்டு அவர்​களை சிரமப்​படுத்​துகின்​றனர். திமுக அரசு திவால் ஆகி​விட்​ட​தால் விவ​சா​யிகளுக்கு கடன் கொடுக்​காமல் அலைக்கழிக்கிறது. இதுகுறித்து தஞ்​சாவூருக்கு வந்​திருந்த பிரதமரிடம் பேசினேன். இப்​போது கடன் பெறு​வதற்கு ஆவணங்​கள் தேவை​யில்லை என்று கூறுகிறார்​கள்.

நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் திறந்​தவெளி​யில் இருப்​ப​தால் மழை​யில் நெல் மூட்​டைகள் நனைந்து விவ​சா​யிகளுக்கு இழப்பு ஏற்​படு​கிறது. அதி​முக ஆட்சி அமைந்​ததும் இந்த பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காணப்​படும். அதி​முக ஆட்​சி​யில் சிறு வணிகர்களுக்கு பாது​காப்பு அளித்​தோம். அதி​முக ஆட்சி சட்​டத்​தின் ஆட்​சி​யாக இருந்​தது.

அனைத்து துறை​களும் எனது கண்​காணிப்​பில் இருந்​தன. இப்​போது இந்த ஆட்​சி​யில் என்ன நடக்​கிறது என்​பது முதல்​வருக்கே தெரி​யாது. இவ்​வாறு அவர் பேசி​னார். அதி​முக மாநகர் மாவட்ட செயலர் தச்சை கணேச​ராஜா வரவேற்​றார். முன்​னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்​தரம், ஆர்​.பி.உதயகு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.



t_bottom">

By admin