• Mon. Mar 23rd, 2026

24×7 Live News

Apdin News

திமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி – தேர்தலுக்கான திட்டம் என்ன?

Byadmin

Mar 23, 2026


தமிழக வாழ்வுரிமைக் கட்சி

பட மூலாதாரம், Velmurugan.T/Facebook

‘அரசியல் செயல்பாடுகளிலும் அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது’ என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்

ஆனால் ‘கூட்டணியில் இருந்து போக வேண்டும் என முடிவு செய்த பின் காரணங்களை தேடி பிடித்து சொல்லியிருக்கிறார்’ என திமுகவின் ஆர்.எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார்.

அதேநேரத்தில் “வேல்முருகன் அரசியல் எதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டுவது என்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெற்று தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி வடிவத்தை எட்டியுள்ளது.

By admin