• Wed. Mar 25th, 2026

24×7 Live News

Apdin News

திமுக கூட்டணியில் யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? ஓர் அலசல்

Byadmin

Mar 25, 2026


திமுக கூட்டணியில் யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? - ஓர் அலசல்

பட மூலாதாரம், @arivalayam/X

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பல கட்சிகளுக்கும் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், சமீபத்தில் கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியிருப்பது பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.

‘வாக்கு வங்கியை இழந்துள்ள தேமுதிகவுக்கு இத்தனை இடங்களை ஒதுக்கியதில் லாபம் தேமுதிகவுக்கு மட்டும்தான், மற்ற கட்சிகளை விட அதிக இழப்பு திமுகவுக்குதான்’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்

ஆனால் தேமுதிகவுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக வாக்குகள் இருப்பதை வைத்தே இந்த முடிவை தலைமை எடுத்ததாக திமுக தரப்பு கூறுகிறது.

கூட்டணியிலுள்ள மக்கள் நீதி மய்யம், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியதும் அக்கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள், அரசியலில் ஜீரோ என்பதை கமல் உறுதிப்படுத்தி இருப்பதாகவும், இதே நிலை நாளை விஜய்க்கு ஏற்படுமென்றும்’ அதிமுக விமர்சித்துள்ளது.

By admin