• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்க விசிக எதிர்ப்பா? தமிழ்நாட்டில் வேகமாக மாறும் கூட்டணி கணக்குகள்

Byadmin

Jan 24, 2026


திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா? திமுக, விசிக என்ன சொல்கின்றன?, தமிழக அரசியல் களம்,

பட மூலாதாரம், Ramadoss/FB

படக்குறிப்பு, ராமதாஸ் (கோப்புப் படம்)

“திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளையாக அவர் இருக்கிறார். வன்னியர்களையும் பட்டியல் சாதியினரையும் இரு தண்டவாளங்களாக ராமதாஸ் பார்க்கிறார்.”

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள் கூறியுள்ள இந்த வார்த்தைகள் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாக மாறியுள்ளன.

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க அங்கம் வகிக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியை நோக்கி ராமதாஸ் நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

‘கூட்டணியில் ராமதாஸ் இருப்பது நல்லது’ என்று கூட்டணிக் கட்சிகளுக்கு எடுத்துக் கூறி சேர்த்துக் கொள்வோம் என்று தி.மு.கவின் செய்தி தொடர்புத்துறை தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

‘பா.ம.கவை சேர்க்கும் முடிவை தி.மு.க தலைமை அறிவித்தால் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்” என வி.சி.க கூறுகிறது.

By admin