• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இரட்டை சவாலை திமுக எவ்வாறு சமாளிக்கும்?

Byadmin

Feb 24, 2026


திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படபடம்

“புதிய கட்சிகளுக்கு திமுக போட்டியிட்ட இடங்களை தானமாக வழங்க வேண்டிய சூழல் உள்ளது. கூட்டணி நலன் கருதி கூட்டணி கட்சிகளும் சில இடங்களை விட்டுத் தர வேண்டும்,”

திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தங்களிடம் இவ்வாறு கூறியதாக இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக-முஸ்லிம் லீக் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

“நீங்கள் 3 இடங்களில் போட்டியிட்டீர்கள், தொகுதியை குறைக்கச் சொல்லி கேட்கவில்லை. ஆனால் ஏதாவது ஒரு தொகுதியை தானமாக கொடுத்தால் நன்றாக இருக்கும். கூட்டணி கட்சிகளில் உள்ளவர்களிடம் தொகுதிகளைக் குறைக்குமாறு கேட்கிறோம், அந்த அடிப்படையிலே உங்களிடமும் கேட்கிறோம். ‘ என்று திமுக தரப்பில் கூறினார்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன்

மறுநாள் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “கடந்த முறை 2 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றோம். இந்த முறையும் உதய சூரியன் சின்னத்திலே போட்டியிடுவோம். 5 இடங்களைக் கேட்டுள்ளோம். இது முதல்கட்ட பேச்சுவார்த்தை தான். அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் எனக் கூறியிருக்கிறார்கள்,” எனத் தெரிவித்தார்.

By admin