• Fri. Oct 31st, 2025

24×7 Live News

Apdin News

திமுக​ கூட்டணி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பில்லை  | ADMK, BJP not invited to all-party meeting

Byadmin

Oct 31, 2025


சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தத்தை எதிர்த்து நடத்​தப்​பட​வுள்ள அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தில் பங்​கேற்​கு​மாறு அதி​முக, பாஜக, பாமக (அன்​புமணி தரப்​பு) தவிர 60 கட்​சிகளுக்கு திமுக சார்​பில் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

தமிழகம் உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த அக். 27-ம் தேதி வெளி​யிட்​டு, பணி​களைத் தொடங்​கியது. இந்த சிறப்பு வாக்காளர் குறித்த திருத்தத்துக்கு திமுக, காங்​கிரஸ், தேமு​திக, நாம் தமிழர் உள்​ளிட்ட 10 கட்​சிகள் எதிர்ப்​புத்தெரி​வித்​தன.

அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் தொடர்​பாக திமுக கூட்​டணி கட்​சிகள் கடந்த 27-ம் தேதி சென்​னை​யில் ஆலோ​சனை நடத்​தி​ன. இதில், எஸ்​ஐஆர் தொடர்​பாக சென்​னை​யில் நவ. 2-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடத்​து​வது என்று முடிவு செய்​யப்​பட்​டது. தொடர்ந்​து, இந்​தக் கூட்​டத்​தில் பங்​கேற்க வரு​மாறு எதிர்க்​கட்​சிகளின் பிர​தி​நி​தி​களை, திமுக நிர்​வாகி​கள் குழு நேரில் சந்​தித்து அழைப்பு விடுத்து வரு​கின்​றது.

அந்​தவகை​யில், தவெக, நாம் தமிழர், தேமு​திக, தமாகா உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சிகளுக்​கும் நேற்று முன்​தினம் அழைப்பு விடுக்​கப்​பட்​டது. தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்​தை, திமுக சார்​பில் பூச்சி முரு​கன் நேரில் சந்​தித்​து, கூட்​டத்​தில் பங்​கேற்​கு​மாறு அழைப்பு விடுத்​தார். தொடர்ந்​து, பாமக, அமமுக உள்​ளிட்ட கட்​சிகளுக்​கும் நேற்று அழைப்பு கொடுக்​கப்​பட்​டது. அதி​முக, பாஜக, பாமக (அன்​புமணி தரப்​பு) தவிர்த்து 60 கட்​சிகளுக்கு திமுக சார்​பில் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. கூட்​டத்​தில் அனைத்​துக் கட்​சிகளின் கருத்​துகளை கேட்​டு, அடுத்​தகட்ட முடிவு​கள் எடுக்​கப்​படும். எஸ்​ஐஆர் திருத்​தத்தை ஆதரிப்​ப​தால் அதி​முக, பாஜக​வுக்கு அழைப்பு விடுக்​க​வில்லை என திமுக வட்​டாரங்​கள் தெரிவித்தன.



By admin